சர்வோதயத்தால் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, November 29th, 2017

யாழ்ப்பாணம் சர்வோதய நிறுவனத்தினால் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்காக வேலை வாய்ப்புடன் கூடிய மோட்டார் வாகனத்துறை மற்றும் விருந்தோம்பல் சுற்றுலாத்துறையில் தொழிற்பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

NVQ Level – 3, Level – 4 அரச சான்றிதழுடன் ஆறு மாத காலங்களைக் கொண்ட இப் பயிற்சி நெறியானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

அந்த வகையில் மோட்டார் வாகனத்துறை மற்றும் விருந்தோம்பல் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதனால் எமது இளைஞர், யுவதிகள் இப் பயிற்சிநெறியில் இணைவதன் மூலம் நிரந்தர தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது தங்கள் குடும்ப வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்றும் விண்ணப்பதாரிகள் நேரடியாக யாழ்.சர்வோதய மாவட்ட நிலையம் இல.568, நெடுங்குளம் சந்தி, ஏ௲9 வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு சமுகம் தருமாறு யாழ்.மாவட்ட சர்வோதய இணைப்பாளர் சி.யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related posts: