சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு மாநாடு எதிர்வரும் 15 இல்!

1485282627 Monday, November 13th, 2017

இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு மாநாடு ஜெனீவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை சார்பில் பிரதியமைச்சர் ஹர்டி டி சில்வா உள்ளிட்ட விசேட குழுவொன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமை விடயங்களின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மீளாய்வு செய்யப்படும். இலங்கையின் மனித உரிமைகள் குறித்து மீளாய்வு செய்யப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 இந்த அமர்வில் இலங்கையுடன் புருண்டி, கொரியா மற்றும் வெனிசூவெலா ஆகிய நாடுகளின் மனித உரிமை மேம்பாடு குறித்தும் மீளாய்வு செய்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.