சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் விழிப்புணர்வு நிகழ்வு!

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாவற்குழி மேற்குப் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சான்றோர் சனசமூக நிலைய மண்டபத்தில் சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் திருமதி அ.சாந்தசீலனின் வழிகாட்டலில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி முகாமையாளர் அன்ரனி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி ந.நிஷாந்தினி, நாவற்குழி மேற்குக் கிராம சேவகர் ந.தனபாலசிங்கம், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் க.யோகநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.நகுலேசகன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. கமலலோஜினிதேவி, உளவளத்துணை உதவியாளர் த.மயூரிகா, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோடீஸ்வரன் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் யாழ். மாவட்ட உளவளத்துணையாளர்.அ. எட்வின் றொஜர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை நிகழ்த்தினர்.
Related posts:
|
|