சர்வதேச தரத்திற்கு இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிக்க நடவடிக்கை!

Saturday, September 3rd, 2016

இலங்கையின் இரத்தினக்கல் கைத்தொழிலை சர்வதேச தரத்திற்கு விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணப்படும் அரிய வகை இரத்தினக்கற்களுக்கு சர்வதேச சந்தையில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் 26வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட அவர் ஊடகவியலாளாகளிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலை சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

15043443Ravi

Related posts: