சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் விசேட கவனயீர்ப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி விசேட கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்றது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட;டில் இந்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் எதிர்காலத்தை நிலைபேறானதாக மாற்ற வலியுறுத்தியும் போரில் மற்றும் துஸ்பிரயோகங்கள் சித்திரவதைகளில் கொல்லப்பட் சிறுவர்களிற்கான நிதியை வலியுறுத்தியும் இதன்போது பிரச்சரம் மேற்கொள்ளப்பட்டதுடன் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது
இதேபோல சிறுவர்கள் மத்தியில் திட்மிட்டரீதியில் பரப்பப்பட்டுவரும் போதைப்பொள் பழக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவும் இங்கு வலியுறுத்தப்பட்டது
Related posts:
|
|