சர்வதேச காவற்துறையின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை!

Tuesday, February 20th, 2018

இரண்டாவது தடவையாகவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் அவருக்குஎதிராக சர்வதேச காவற்துறையின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது குறித்து சட்டமா அதிபர் கவனம் செலுத்தியுள்ளதுடன் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள்தெரிவித்துள்ளன.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி விநியோக மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமானவராக அர்ஜூன் மகேந்திரனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் கடந்த 15ஆம் திகதிக்கு முன்னர் குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான்நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் அதனை புறக்கணித்தமையினால் மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர்குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts: