சர்வதேச ஒட்டிசம் தினம் இன்று!

Saturday, April 2nd, 2016
பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் காணப்படும் அசாதாரணத் தன்மை மற்றும் பின்னடைவு காரணமாக ஏற்படும் ஒருவகை நோய் நிலைமையே ஒட்டிசம் என அழைக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு இன்று ஒட்டிசம் நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் சர்வதேச தினம் இன்று உலகெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

சிறு பிள்ளைகள் ஒட்டிசம் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் தன்மை உலகில் அதிகரித்து வருவதாக கொழும்பு – சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் மனநல விசேட நிபுணரான டொக்டர் சுவர்ணா விஜேதுங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் 93 பிள்ளைகளில் ஒருவர் ஒட்டிசம் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகுவதாகவும் ஒட்டிசம் ஏற்படுவதற்கான காரணம் இதுவரை சரியாகக் கண்டறியப்படவில்லை என்றபோதிலும், மரபணு மற்றும் சூழலில் ஏற்படும் உள்ளக செயற்பாடுகள் காரணமாக இந்த நோய்த் தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

உரிய சிகிச்சைகளின்றி இந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை சமூகமயமாக்குவதில் பெற்றோருக்கு பாரிய பங்கிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை உச்சத்தில் ஏற்றிவைப்போம்” என்பதை தொனிப்பொருளாகக்கொண்டு, அந்த குறைப்பாட்டை அறிந்து ஒட்டிசம் நோய் குறித்து தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

Related posts: