சர்வதேச இஸ்லாம் மத மாநாடு இலங்கையில்!

சர்வதேச இஸ்லாம் மத மாநாடு ஒன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது. தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹாலீம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச மட்டத்தில் இஸ்லாமிய மத மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தத் தீர்மானித்துள்ளது. பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளன.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையில் இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், புருணை, வியட்நாம், சீனா, ஜப்பான், தென்கொரியா, மியன்மார் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஊடாக உலக முஸ்லிம் நாடுகளின் கவனத்தை இலங்கையின் பால் ஈர்க்க முடியும் எனவும் இதனால் பல்வேறு நலன்கள் கிடைக்கும் எனவும் அமைச்சர் ஹாலீம் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|