சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவு!

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைது செய்வதற்கான பிடியாணையை சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மின்சாரம், மருந்துகளுக்கு வற் வரி இல்லை !
யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு!
அரச பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை - விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
|
|