சர்ச்சைக்குரிய உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்!

உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், மாணவிகளின் கல்வி செயற்பாடுகளை அமைதியான முறையில் தொடர்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையில் கல்வி கற்கும் மாணவிகளது பெற்றோர்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
Related posts:
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி!
தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை - அமைச்சர் பந்துல குணவர்தன!
மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்ப...
|
|