சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு!

2-6 Thursday, May 18th, 2017

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவால் குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று(17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகா அக்கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை இரத்துச் செய்து உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பம்!
வடபகுதியில் காற்று அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்! இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
கேப்பாபுலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்!
30 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை - கிளிநொச்சி  பொது முகாமையாளர் எஸ்.துரைசிங்கம்!