சயிடம் அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு போலி நாடகமா?

Wednesday, March 1st, 2017

சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி இரவு 08.30 அளவில், சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.  இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய எம்பிலிபிடியவில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர் வசம் இருந்து துப்பாக்கி, ரவைகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயக்கொடி கூறியுள்ளார்.

அத்துடன் இவர் நேற்றையதினம் கடுவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிறிதொரு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ உறுப்பினரிடமும் இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, சமீரவுக்கு உயிராபத்து இருப்பதாக காண்பிக்கவே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், போலியாக நடத்தப்பட்டிருக்கலாம் என, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்கமைய இதனை ஏற்பாடு செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதேசசபை உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவரையும் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த இருவரும் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்று நீண்ட நாட்களாக மறைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேடப்படு வரும் பிரதேசசபை உறுப்பினர் சமீரவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, விஷேட பொலிஸ் குழுக்களால் நேற்றையதினம் சமீரவிடம் இது தொடர்பில் நீண்ட விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

288280698Malabe-SAITM-CEO-Sameera-L

Related posts: