சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி !
Thursday, September 22nd, 2016
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்தையில் இறுதி செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படிருந்த போதிலும் முதலாளிமார் சம்மேளனாத்தின் விட்டுகொடுக்கா தன்மையினால் பேச்சுவார்த்தை மற்றும் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன இநவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளை முற்றாக நிராகரித்த சம்மேளனம் ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். அத்துடன் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க தயாரில்லை என்ற நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.
கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கபட வேண்டுயேயானால் தற்போது நடைமுறையில் உள்ள 620 ரூபாவை உள்ளடக்கியதாகவே கைசாத்திடப்பட வேண்டும் என்றும் முதலாளிமார் சம்மேளனம் அமைச்சர் ஜோன் செனவிரட்னவிடமும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடமும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனால் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் அதிருப்தியுடன் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
|
|