சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, March 10th, 2022

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாட்டை வந்தடைந்த 2,600 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலில் இருந்து, சமையல் எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாளாந்தம் 900 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவினை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: