சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிங்கப்பூர் நிபுணர்களை !

Thursday, January 12th, 2017

இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை கண்கானிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சமூக வலைத்தளம் தொடர்பிலான நிபுணர் க்ரெலஸிக் நிவ்டன் என்பவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை கண்கானிப்பதற்காக 100 பேர் கொண்ட குழு செயற்படவுள்ளது. ஜெக் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்னால் உள்ள கட்டடத்தில் இவர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கண்கானிப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செய்தி பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செய்தி பணிப்பாளர் வழங்கிய தகவல்களை கருத்திற் கொண்டு, சமூக வலைத்தள நிபுணர் க்ரெலெஸிக் நிவ்டன் அழைத்து வரப்பட்டுள்ளார்.

social-media

Related posts: