சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியம் – ஐங்கரன்

சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியமான தென்பதுடன், அதனை உணர்ந்து கொண்டு செயற்படும் போதுதான் சமூகத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்தமுடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி தெற்கு மகளிர் அமைப்பினருடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின்போது உலகில் பெண்கள் அரசியல் உள்ளிட்டபல்வேறு விடயங்களில் வியக்கத்தக்க வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் நாட்டில் நிலவியகொடியஅழிவுயுத்தம் காரணமாக வடக்குகிழக்கு பகுதிகளில் பெண்கள் அமைப்பினரால் எவற்றையும் சாதிக்க முடியாதநிலை ஏற்பட்டிருந்ததுடன், அதன்காரணமாக அபிவிருத்தியில் பாரியபின்னடைவுகளையும்சந்திக்கவேண்டியதுர்ப்பாக்கியமும்; ஏற்பட்டது. இந்நிலையில் எமதுபகுதிகளைஅபிவிருத்தியால் தூக்கிநிறுத்து வதற்குபெண்களின் பங்குமிகவும் காத்திரமானது.
இதை உணர்ந்துகொண்டு அனைத்து மகளிர் அமைப்புகளும் சமூகப் பொறுப்புணர்வுடன் தமக்கான பணிகளை முன்னெடுக்கவேண்டுமென்றும், அதனூடாகவே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியமென்றும் ஐங்கரன் மேலும் தெரிவித்தார்.
இதன்போது குறித்த மகளிர் அமைப்பு பிரதிநிதிகளின் தேவைப்பாடுகள், பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளைபெற்றுத் தரும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
Related posts:
|
|