சமாதானத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நடைபவனி!

இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தின் அடையாளமாக இலங்கை முப்படையினரின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களிற்கிடைலும் சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி இடம்பெற்ற இந்த நடைபவனியை இராணுவம் விமானப்படை கடற்படை ஆகிய முப்படைகளின் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையில் ஆரம்பமான இந்த பேரணியை யாழ் மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார்.
குறித்த பேரணி யாழ்ப்பாணம் பண்ணை வீதியூடாக காங்கேசன்துறை வீதி ஸ்ரான்லி வீதி ஆகிய நகர வீதிகளுடாக பயணித்து இறுதியாக ஒல்லாந்தர் கோட்டையில் நிறைவடைந்தது.
நாட்டிலுள்ள சகல இனத்தவரும் நிரந்தர சமாதானம் மற்றும் ஒற்றமையை பெற வலியுறுத்தி இப்பேரணியில் முப்படைகளைச் சேர்ந்த விரர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|