சபாநாயகருக்கு உலக சமாதானப் பேரவையால் விருது!

Thursday, March 10th, 2016

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு உலக சமாதானப் பேரவையினால் இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற காரணிகளுக்கு விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகரின் சூர்யா என்ற சமூக சேவை நிறுவனத்தினால் ஆற்றப்பட்ட சேவைகளை பாராட்டும் வகையில் கரு ஜயசூரியவிற்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.