சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Thursday, August 10th, 2017

யாழ்.கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் குறித்த சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போதே நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்ததோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்பையும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களில் நான்கு கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே தினத்தில் 2 பேர் யாழ்ப்பாணத்தில்  பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: