சந்தேகநபர் சுட்டுக்கொலை: 20 இலட்சம் இழப்பீடு வழங்கிய இராணுவ அதிகாரி!

Tuesday, October 18th, 2016

பருத்தித்துறையில் அமைந்துள்ள இராணுவத்தின் ஏழாவது கெமுனு படையணியின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட மேஜர் விமல் விக்ரமகே, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன் உயிரிழந்த விடுதலைப்புலி சந்தேகநபர் ஒருவரின் மனைவிக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கியுள்ளார்.

உயிரிழந்த விடுதலைப்புலி சந்தேகநபரின் குடும்ப உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் சந்தேகநபர் ஒருவர் கைவிலங்குடன் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, அவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில், மேஜர் விமல் விக்ரமகே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜனி குசலா வீரவர்தன, குற்றவாளியான இராணுவ அதிகாரியை இழப்பீடு செலுத்துமாறு கட்டளையிட்டார்.

akila-viraj-kariyavasam copy

Related posts: