சதொச நிறுவனத்திற்கோ அதன் ஊழியர்களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது – அமைச்சர் ரிசாத்
Wednesday, July 26th, 2017அண்மையில் சீனி கொள்கலனிருந்து கொக்கேன் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சதொச நிறுவனத்திற்கோ அதன் ஊழியர்களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களதின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் தமக்கும் சதொச நிறுவனத்திற்கும் களங்கும் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான பிரசாங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
பொலிஸாரும் சுங்க பிரிவினரும் போதைப்பொருள் ஒழிப்பு பணியமும் விசாரணைகளை நடத்துகின்றன. விசாரணையின் பின்னர் உண்மையான தகவல்கள் அம்பலமாகும் என அவர் கூறினார். சதொச நிறுவனம் திறந்த அடிப்படையில் கேள்விப் பத்திரங்களை ஏற்றுக்கொள்கிறது. இதற்காக 137 வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளார்கள். வியாபாரிகளின் கேள்விப் பத்திரத்திற்கு அமைய கொள்வனவு செய்யப்பட்ட சீனி கொல்களனிலிருந்து கொக்கேன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சீனி தனியார் நிறுவனங்களினால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் சதொச நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்றும் கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|