சண்டிலிப்பாயில் இயங்கிய சுகாதாரமற்ற கோழிப்பண்ணை மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
Saturday, November 25th, 2017சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிப்பண்ணை இயங்கி வந்தது எனத் தெரிவித்து பொது மக்கள் சார்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி மக்கள் மேலும் தெரிவித்ததாவது;
சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கோழிப்பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. சுகாதாரம் அற்ற முறையிலும், அனுமதிப் பத்திரம் பெறாமலும் கோழிப்பண்ணை இயங்கி வந்தமையால் நாம் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளோம். துர்நாற்றம் மற்றும் இலையான் தொல்லையால் குழந்தைகளின் பாதுகாப்பு கஷ்டமாகியது. அத்துடன் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக நாம் உரிய தரப்பினருக்கு தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்கள் சார்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் 4 ஆம் திகதி பண்ணை உரிமையாளர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிவான் பணித்துள்ளார் என்று தெரிவித்தனர்.
Related posts:
|
|