சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பிற்குட்பட்ட கோவிலன் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை(17) காலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களையும் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பு - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவ...
|
|