சட்டவிரோத மின்சாரம் பெற்றோர் கைது!

Monday, November 28th, 2016

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர் என் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபையின் அதிகாரிகளும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து நடத்திய தீடீர் நடவடிக்கையில் இவர்கள் அகப்பட்டுள்ளனர். பிரதான மின்வடத்தில் இருந்து வயரை இணைத்து மின்சாரம் பெற்ற மூவர் சிறுபிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே குற்றத்தைப் புரிந்த மற்றும் ஒருவர் பத்தூத் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மேலும் தெரிவித்தார்.

arrest

Related posts: