சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை!
Wednesday, August 26th, 2020இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அங்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.ந.திருலிங்கநாதன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றப்படுக்கையில் மிக மோசமான முறையில் மண்ணகழ்வு இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், செருக்கன் பகுதியில் அமைக்கப்படும் உப்பளத்தின் பணிகளை நிறுத்தி செய்கை நிலங்களை பாதுகாத்து தருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|