சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்பு!
Wednesday, September 28th, 2016
வரி எய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் இருவர் களுத்துறை நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வேனொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வரி எய்ப்புச் செய்யப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் களுத்துறை, வெட்டுமகட ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சிகரெட்டுக்களை விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடுகுருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதோடு, இவர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related posts:
|
|