சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கள் சிகரெட்டுகளை கொண்டுவந்த நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 90 ஆயிரம் சிகரெட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எவரும் ஐஎஸ் அமைப்பில் இல்லை!
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை - மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச...
பதவி நீக்கப்பட்டார் தில்ருக்ஷி !
|
|