சட்டவிரோதமான சுரங்க அகழ்வை பணிகளை சுற்றிவளைக்க விசேட பொலிஸ் குழு!

Saturday, May 7th, 2016

அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் சுரங்க அகழ்வுப் பணிகளை சுற்றிவளைப்பதற்கு பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இதன்போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அபிவிருத்தி செயற்பாடுகளின் போது புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் ஒத்துழைப்புக்களை தாமதம் இன்றி பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Related posts: