சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!

Saturday, April 16th, 2022

ஷசட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  கைதடி பகுதியில்  சந்தேகத்துக்கிடமான வாகனத்தை சோதனை செய்த பொழுது அனுமதிப்பத்திரம் இல்லாத சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட  4 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த 8 முதிரை மர குற்றிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு   மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம்,மரக்குற்றிகளை  நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: