சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் கைது

யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் நேற்று கடந்த வெள்ளிக்கிழமை(02) காங்கேசன்து றை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து குரும்பசிட்டிப் பகுதியூடாக சட்தவிரோதமான முறையில் கல் அகழ்ந்து செல்வதாக காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் குரும்பசிட்டிப் பகுதியில் வைத்துக் குறித்த உழவியந்திரத்தை மறித்துச் சோதனையிடப்பட்டது. குறித்த சோதனை நடவடிக்கையின் போது உழவியந்திரத்தில் அனுமதியின்றிக் கல் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்துச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உழவியந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக இந்தியா சென்ற இலங்கையர் கைது!
கீதாவுக்கு வழங்கிய வரிசலுகையை உடனடியாக மீள அறவிட வேண்டும் - கபே அமைப்பு !
10 மாத குழந்தையை தாக்கிய கொரோனா தொற்று - ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர்!
|
|