சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் பொலிசாரால் கைது!

Friday, June 11th, 2021

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முள்ளியவளைப் பகுதியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நபர் கட்டுநாயக்க விமானநிலையமூடாக கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றுள்ளதாகவும் பின் இந்தியாவின் நாகபட்டினத்தில் வசித்து வந்த நிலையில் 2021 மார்ச் 12 ஆம் திகதி கடல் வழியாக சட்ட விரோதமாக இலங்கைக்குள் நுழைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தள்ளார்

சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: