சஜீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

Thursday, May 4th, 2017

மிகின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் அரசுக்கு சொந்தமான 883 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2007 – 2008ம் ஆண்டு காலப் பகுதியில் டென்டர் இன்றி சிங்கப்பூர் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தமையினூடாக மிஹின் லங்கா நிறுவனத்திற்கு பொருட்கள் கொள்வனவு செய்தமையால் அரசாங்கத்திற்கு நஸ்டம் ஏற்பட்டதாக கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: