சங்குப்பிட்டி வீதியில் கோர விபத்து : இருவர் பலி!

Friday, July 22nd, 2016

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுஇரவு இடம்பெற்ற கறித்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பூநகரி பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபிராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையும் மாவத்தகமவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பீசீ கரம்பொல என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. சடலம் , கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபிராஜ் என்பவரை விபத்து நடைபெற்ற இரவு 1.30 மணியளவில் காணவில்லை என்று தேடியபோது விபத்து இடம்பெற்ற இடத்தில் சங்குபிட்டி கடல் நீரினுள் சடலம் இருப்பதை கண்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜ் பார்வையிட்ட பின்னர் கடலில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: