கோர விபத்து; தீப்பற்றி எரிந்த இரு வாகனங்கள்!

அம்பலாந்தோட்டை சிசிலகம பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளன.
குறித்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு பேர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் அவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாககாவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 09 மாத கைக்குழந்தையொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்துடன் கிளை வீதியில் இருந்து திடீரென பிரதான வீதிக்கு செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
உலகில் வருடாந்தம் புற்றுநோய் காரணமாக 1.5 மில்லியன் மக்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி - தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் - அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொ...
|
|