கோப் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த கடமைப்பட்டுள்ளேன் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

Friday, February 12th, 2021

கோப் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் இந்த பரிந்துரையை தான் செயற்படுவதாகவும், இது தொடர்பாக ஒருபோதும் அச்சமடைய வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நேற்றையதினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்போது  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2017, 2018 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் அறிக்கை, மற்றும் அதன் செயற்திறன் பற்றியும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: