கோப்பாய் மத்தி இராசன் சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு உரியதீர்வு – ஈ.பி.டி.பியின் சேவைக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்தகோரிக்கைக்கு அமைவாக கோப்பாய் மத்தி இராசன் சனசமூகநிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்குஉரியதீர்வு காணப்பட்டுள்ளது.
இராசன் சனசமூகநிலைய பிரதிநிதிகள் அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவைசந்தித்து முன்பள்ளி சிறார்களுக்கு குடிநீர்த் தேவையை நிவர்த்திசெய்ய வேண்டியதன் அவசியத்தை கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.
கோரிக்கை தொடர்பில் அவதானஞ் செலுத்திய செயலாளர் நாயகம் உரியதீர்வு பெற்றுத் தரப்படுமென இச்சந்திப்பின் போது உறுதிமொழி வழங்கியிருந்தார்.
அதனடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியவேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, அதனைஉடனடியாகநிவர்த்தி செய்யுமாறு கட்சியின் வலி. கிழக்குபிரதேச நிர்வாகச் செயலாளர் ஐங்கரனிடம் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரையினை வழங்கியிருந்தார்.
குறித்தவேலைத் திட்டங்கள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் இக்குடிநீர் விநியோகத் திட்டத்தை இராசன் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேசநிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் நேற்றையதினம் சனசமூகநிலைய நிர்வாகத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சனசமூக நிர்வாகமும் மக்களும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|