கோப்பாய் குப்பிழாவத்தையில் 175 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது!

Saturday, May 2nd, 2020

45 லிட்டர் கசிப்பு மற்றும் 175 லிட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கோப்பாய் குப்பிழாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் குப்பிழாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 45 லீற்றர் கசிப்பு 175 லிட்டர் கோடா ஆகியவற்றை கைப்பற்றியதுடன் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த பாத்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts: