கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளில் புதிய ஒப்பந்தம்!

Thursday, August 11th, 2016

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகள் தொடர்பில் புதிய ஒப்பந்தமொன்று நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக மேல்மகாணம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பழைய ஒப்பந்தத்தை காலவதியாக்கி, இந்த புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாலும், துறைமுக நகர் நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திற்கு தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இலாபம் கிடைக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு அறிக்கை உரிய முறையில் தயார் செய்யாமை உள்ளிட்ட பல பிச்சினைகள் காரணமாக கடந்த அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தற்போதைய அரசாங்கத்தினால் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: