கொழும்பு துறைமுக உணவகத்தில் தீ!

கொழும்பு துறைமுகத்தின் உணவகத்தில் பரவிய தீயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
துறைமுக உணவகத்தில் இன்று (08) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.துறைமுக தீயணைப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்தில் 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
இன்று கடலுக்கு செல்வது ஆபத்து.!
இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நட...
|
|