கொழும்புத் துறைமுகத்தில் சோதனையின் பின்பே சீனி இறக்க அனுமதி !

பிரேஸில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மூடைகள் கொண்ட 50 சீனி கொள்கலன்களை முழுமையாக சோதனைக்குட்படுத்தும் வரை தற்காலிகமாக அவற்றை இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த 50 கொல்கலன்களும் ஒன்றன் பின் ஒன்றாகச் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னரே தறைமுகத்திலிருந்து அவை வெளியே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும் என்ற சுங்க அதிகாரிகளும், போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரும் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரேஸிலில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி கொல்கலன்களிலிருந்து 45கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருட்கள், பேலியகொடைப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
32 ஆவது முதலமைச்சர்களின் மாநாடு காலியில்!
137 ஆண்டுகளுக்குப் பின் காலநிலையில் மாற்றம் - நாசா
75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு த...
|
|