கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

Monday, July 26th, 2021

நாட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகனசாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: