கொள்ளையில் ஈடுபடும் பெண் தொடர்பாக பொலிஸ் எச்சரிக்கை..!!

Friday, May 6th, 2016
குடாநாட்டின் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளம்பெண் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியுள்ளனர்.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற குறித்த பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு இலட்சத்திற்கு அதிகமான பணம்,நகைகளை கொள்ளையிட்டு மறைந்து வாழ்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தற்போது கொழும்பு புறநகர் பகுதியில் நடமாடி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் குறித்த சந்தேக நபரான தேனுகா ரவீந்திரன்(வயது22) என்பவர் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த போது பல இளைஞர்களை தொடர்புகொண்டு பல இலட்சங்களை திருடி தலைமறைவானார் எனவும் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related posts: