கொரோனா வைரஸ் பரவலையடுத்து பல்வேறு இலவச இணையத்தள சேவைகள்!

Wednesday, March 25th, 2020

Covid 19 வைரஸ் காரணமாக Dialog நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளது.

அத்துடன், மக்கள் covid 19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்ள அழைப்பு ஏற்படுத்தும் போது விழிப்புணர்வு பற்றி பதிவு செய்த ஒலிபதிவுகளை ஒலிபரப்படுகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், Dialog நிறுவனமும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில்,

1390 என்ற நம்பர் ஊடாக மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம்.

பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமையினால் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இணைய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, http://guru.lk இந்த வலைத்தளத்திற்குள் பிரவேசித்து வீட்டில இருந்தவாறே படிக்க முடியும்.

அரச மற்றும் தனியார் துறையினர் வீட்ல இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவங்களுக்கு data package இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

4G தொடர்புகளுக்கு 100 வீதம் போனஸ் சலுகை வழங்கப்பட்டுள்ளது. My dialog app மூலமாக #678# அழுத்தி இலவசமாக செய்திகள் தெரிந்து கொள்ளமுடியும்.

Dialog Tvயில் அனைத்து channelsம் activate செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவசர கடன் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவசரமாக கடன் பெற்றுக்கொள்ள #007# இந்த எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: