கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 176 பேர் நாடு திரும்பினர்!

Monday, August 10th, 2020

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 176 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று திங்கட்கிழமை காலை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது 148 இலங்கையர்கள் அடங்கிய குழு ஜப்பானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 28 பேர் கட்டாரில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: