கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு!

Sunday, May 23rd, 2021

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை, கொழும்பு-2 மற்றும் றாகம, காலி, பன்னிபிட்டிய, ஹோமாகம, அத்துருகிரிய, மத்துகம, களுத்துறை வடக்கு, வலல்லாவிட்ட, பயாகல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும் 14 பெண்களும் அடங்குவதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 23 பேர் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 1,132 ஆக உயர்வடைந்துள்ளது

Related posts: