கொரோனா சந்தேகம்: மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட சடலம்?

Thursday, April 2nd, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்ற சந்தேகத்தில், நேற்றையதினம் புதைக்கப்பட்ட சடலம், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கஹதுடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்தேகொட வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 67 வயதான நபரே இவ்வாறு திடீரென மரணமடைந்துள்ளார். அந்த நபர், இலங்கைக்கு கடந்த 20ஆம் திகதியன்று மாலைதீவிலிருந்து திரும்பியவர் என கூறப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் அதிடீரென மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் , கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மரணமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, புதைக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் , சடலத்தின் சில பாகங்கள், விசேட பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related posts:


வெங்காயம், உருளைக் கிழங்குக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் - யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விவ...
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்...
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!