கொட்டும் மழையில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த விமான விபத்தில் இறந்த கால்பந்து வீரர்களுக்க இறுதிச் சடங்கு!

கொலம்பியா நாட்டில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்களின் உடல் சொந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பெருந்திரளான பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.
கொலம்பியா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் 50 சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு குறித்த கிளப்பின் உறுப்பினர்களால் Conda Arena விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டது.
பிரேசில் இராணுவ வீரர்களால் குறித்த சவப்பெட்டிகளை திறந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கப்பட்டனர். கொட்டும் மழையையும் பொருட்ப்படுத்தாமல் மொத்த சனத்தொகையில் பாதிக்கு மேல் அந்த விளையாட்டு அரங்கில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குவிந்திருந்தனர்.
மழையில் நனைந்திருந்தாலும் மக்களில் கண்கள் அழுது சிவந்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். Chapecoense உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தினர், அவர்கள் எங்கள் இதயத்தில் இருக்கிறார்கள் என கண்ணீருடன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.இறுதி அஞ்சலி கூட்டத்தில் பிரேசில் ஜனாதிபதி கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|