கொடிகாமம் சந்தையில் கழிவு வீதம் அறவிடுவதற்கு தடை!
Tuesday, April 12th, 2016சந்தைகளில் அறவிடப்படும் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்யும்போது கழிவு நடவடிக்கைகளினால் அதிகளவிலான நட்டத்தை அடைகின்றனர்.
இந்நிலையில் 10% கழிவை வழங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் அ. வினோராஜ் அறிவித்துள்ளார்.
கொடிகாமம் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரும் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வியாபாரிகளால் 10% கழிவு அறவிடப்படுவதனை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச சபை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும்போது 10% இற்கு ஒன்று என்ற வீதத்தில் கழிவுபெறப்படுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும். விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி கழி-வைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என சந்தை வியாபா-ரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாழைச் செய்கையையும் தாக்கும் படைப்புழுக்கள்!
உலக உழைப்பாளர் தினம் இன்று!
நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட "A" பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் ப...
|
|