கொகெய்ன் போதைப்பொருளுடன் கொழும்பு வந்த கப்பல்!
Friday, December 9th, 2016கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈக்வடோர் நாட்டிலிருந்து வந்துள்ள அந்தக் கப்பல் இந்தியா நோக்கி செல்லவிருந்ததாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் கொகெய்ன் இருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலின்படி கப்பல் பரிசோதனை செய்யப்பட்டதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.
Related posts:
7 தமிழக மீனவர்கள் கைது!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரிடம் புலனாய்வுத் துறை விசாரணைகள்!
ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையவர் – வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆ...
|
|