கைதி படுகொலை வழக்கு சந்தேகநபர் ஒருவர் சாட்சியை மிரட்டியதாக முறையீடு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைதி ஒருவர் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றில் சாட்சியமளித்த நபரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தி வருவதாக மல்லாகம்நீதிவான் நீதிமன்றின் கவனத்தக்குக் நேற்றுக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை நீதிவான் ஏ.யூட்சன் கவனத்திற்குக் கொண்டு வந்த சட்டத்தரணி கிருஸ்ணவேணி, அதுதொடர்பிலான நகர்த்தல் பத்திரம் ஒன்யையும் மன்றில் நேற்று சமர்ப்பித்தார்.
குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 25, 26ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக அவருடன் கைதானமற்றொரு நபர் மல்லாகம் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
சித்திரவதை மற்றும் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என அப்போது சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் கடமையில் இருந்த 8 பொலிஸாரின் பெயர்களை அவர் மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பில்சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப்பொலிஸாரால் சம்பந்தப்பட்ட எட்டுப் பொலிஸாருக்கும் எதிராக கொலை மற்றும் சித்திரவதைக்குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் எதிராக சித்திரவதைக் குற்றசாட்டின் கீழ்யாழ்.மேல் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த எண்மரில் ஐவருக்கு எதிராக சடலம் மீட்கப்பட்ட பகுதிக்குட்பட்ட கிளிநொச்சி நீதிவான்நீதிமன்றில் கொலைக் குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி கிருஸ்ணவேணி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியை அச்சுறுத்தி வருவதாக நீதிவான் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
சாட்சி தனது பிள்ளைகளை தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட்டிக் சென்று வரும் வேளைகளில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரைப் பின்தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
மேலும் வீதிகளின் காணும் போதும் அவர் சாட்சியை பொலிஸ் உத்தியோகஸ்தர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டி இது தொடர்பில்நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
Related posts:
|
|